நமது இந்தியாவில் பல செல்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி (5G) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதுவும் இந்த பட்ஜெட் விலை 5ஜி போன்கள் (5g phones) இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:
நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G): 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் (amazon) தளத்தில் ரூ.9,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி காரடுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. இந்த போனை ரூ.9249 விலையில் வாங்கிவிட முடியும். Airtel அதிரடி.. 6GB டேட்டா.. 600 SMS.. 70 நாள் எக்ஸ்டரா வேலிடிட்டி.. எந்த திட்டம்? என்ன விலை? இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட், அட்ரினோ 619 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா ஜி34 5ஜி (Motorola G34 5G): 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.9,999 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக மோட்டோரோலா ஜி34 5ஜி போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 5000எமஏஎச் பேட்டரி, டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G): 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம் டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஐடெல் பி55 5ஜி (itel P55 5G): 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஐடெல் பி55 5ஜி போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,399 விலையில் வாங்கலாம். 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட், 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G): 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா பிளேஸ் 5ஜி போன் அமேசான் தளத்தில் ரூ.9,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 700 சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G): 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 13சி 5ஜி போன் அமேசான் தளத்தில் ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.9,499 விலையில் இந்த போனை வாங்க முடியும். 5000எம்ஏஎச் பேட்டரி, 6.74-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, டைமன்சிட்டி 6100 பிளஸ் 5ஜி சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்தது.