நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘டேனி’. அவர் இந்த படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும், இந்த படம் தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்துக்காக நடிகை கீர்த்தி சுரேசுக்கும், உங்களுக்கும் மோதல் இருப்பதாக பேசப்படுகிறதே? மற்றும் சில கேட்கப்பட்டது.
“மக்கள் செல்வி” என்று கீர்த்தி சுரேசை அழைத்து வருவதாக சொன்னார்கள். இதுபற்றி விசாரித்தபோது, யாருமே யாருக்கும் அந்த பட்டத்தை கொடுக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். எனக்கு சமூக சேவையில் ஈடுபாடு இருப்பதால், அந்த பட்டத்தை பல்வேறு அமைப்பினர் இணைந்து கொடுத்தார்கள். நான் ஏற்றுக்கொண்டேன். மற்றபடி கீர்த்தி சுரேசுக்கும், எனக்கும் மோதல் இல்லை என்றும், இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் நான் அரசியலுக்கு வருவேன். அப்பாவின் கட்சியிலோ, அல்லது வேறு எந்த ஒரு கட்சியிலோ இணைய வாய்ப்பில்லை. அரசியலுக்கு வந்து எந்த பயமும் இல்லாமல், மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்றும் வரலட்சுமி சரத்குமார் பதில் அளித்தார்.