மானுடம் தழைக்கமட்டுமின்றி, இயற்கையும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை..!!
ராஜஸ்தானில் வீற்றிருக்கும் ஓர் அதிசய கிராமம் பிப்லான்ட்ரி. இந்த கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது 111 மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார்கள்.
மரத்துடன் சேர்ந்து குழந்தையும் வளர்கிறது. இப்படி நட்டு வைக்கப்பட்ட மூன்று லட்சம் மரங்கள் பிப்லான்ட்ரியை அலங்கரிக்கின்றன. அதிகமாக வேம்பு, மாங்காய், நெல்லி மரங்களைத்தான் நடுகின்றனர்.
மேலும் கிராம மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 21 ஆயிரம் ரூபாயை பெண் குழந்தையின் பெற்றோருக்கு நன்கொடையாகத் தருகின்றனர்.
நன்கொடை பணத்தில் 10 ஆயிரம் ரூபாயைத் திருப்பி வாங்கி குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்கின்றனர். குழந்தைக்கு 20 வயதாகும் வரை அந்தப் பணத்தை எடுக்கக்கூடாது என்பது விதி.
பெண் குழந்தையைக் கொண்டாடும் பிப்லான்ட்ரி உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. கிராமத்தின் தலைவராக இருந்த ஷ்யாம் சுந்தர் இந்த அற்புத திட்டத்தை தன் மகளின் நினைவாக ஆரம்பித்தார். சில வருடங்களுக்கு முன் அவர் இறந்துவிட்டார்.
இயற்கையினை செழிக்கவைக்க, இதனை நாமும் பின் பற்றுவோம்.