சென்னை பத்திரிகை தகவல் அலுவலகமும், மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகமும் இணைந்து இணையும் கருத்தரங்கு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நடத்து.
இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பெர்னார்டு சுவாமி சென்னை லயோலா கல்லூரிப் பேராசிரியர் அவார்.
நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய பணிகளையும், வரலாற்றையும் பேசிய பேராசிரியர் பெர்னார்ட் சுவாமி, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் செயல்பட்டதாகவும், ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய நேதாஜி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தது பற்றியும் அந்தக் கட்சியின் தலைவராக பணியாற்றியதையும் திரு பெர்னார்ட் விவரித்தார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவிற்காக எட்டு மொழிகளில் வானொலி சேவையை ஜெர்மனியில் நேதாஜி அறிமுகப்படுத்தியதாகவும், இந்திய தேசிய ராணுவத்தை 1942-ஆம் ஆண்டு திரு மோகன் சிங் உடன் இணைந்து நேதாஜி உருவாக்கியதாகவும் குறிப்பிட்ட அவர், அந்தப் படையில் 4000-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் இணைந்ததாக தெரிவித்தார்.
நிகழ்சியின் தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகததின் இயக்குநர் திரு குருபாபு பலராமன் அவர்கள் நேதாஜியின் பிறந்த நாளை “பராக்ரம திவசாக” மத்திய அரசு கொண்டாடுகிறது என்று தெரிவித்தார். நிறைவாக, துணை இயக்குனர் திரு நதீம் துஃபைல் நன்றியுரை கூறினார்.