கொரோனாவால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள் பலவிதமான துன்பமடைகின்றனர். பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். குஜராத் அரசு! கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அதிரடி சட்டம் பிறப்பித்துள்ளது. இச்சட்டம் கிட்டத்தட்ட 35 லட்சம் மாணவர்களுடைய பெற்றோர்களின் சுமையை குறைக்கும். வரும் கல்வியாண்டு 2020/21 வரை தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க கூடாது என்றும், இந்த கொரோனா காலகட்டத்தில் கல்வி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சலுகைகளை அறிவித்து பெற்றோர்களின் சுமைகளை குறைக்க வேண்டுகிறோம்.