உலகமே கொரோனா தொற்றால் முடங்கி கிடைக்கும் நிலையில் தங்கம் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர் .
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதன் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி உள்ளார்கள். ஆனால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வது ஆச்சர்யமாக உள்ளது. . இது கல்யாணத்திற்கு நகை வாங்குவோரை இது கடும் அதிர்ச்சி அடையச் செய்ததுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூன் 20ம் தேதி முதல் தங்கம் உச்சத்தினை நோக்கி சென்றுள்ளது . கடந்த 20 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 37,616 ரூபாய்க்கு க்கு விற்பனையானது அடுத்த நாள் 37,736 என உயர்ந்தது, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்ற தங்கம் விலையானது புதிய உச்சத்தினை அடைந்துள்ளது. இந்த உயர்வு வரலாறு காணாத உயர்வு ஆகும்.
விலை நிலவரம் : ஒரு கிராம் தங்கத்தின் விலை இரு நாட்களுக்கு முன் 4,885 க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் 39,080 என்ற புதிய உச்சத்தினை அடைந்துள்ளது. இதே போல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தால் நடுத்தர வர்க்கத்தினர் இனி தங்கத்தை பொருட்காட்சியில் தான் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எழுந்துள்ள நிலையில் . நேற்றைய தினமும் தங்கம் விலை உயர்ந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4904க்கும், ஒரு சவரன் விலையானது 39,232க்கும் விற்கப்பட்டது. இந்த ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்தால் கிராமின் விலை 5000 தை தொடும் அதற்குமேல் போகலாம் மேலும் சவரன் விலை 50 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் தொடர்ந்து நகையின் விலை அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தில் முதலீட்டை அதிக அளவில் செய்யத் ஆரம்பித்து விட்டார்கள் . இது தான் தங்கம் விலை ஏற்றியதற்கு காரணம்.