வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் செப்டம்பரில் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளன. இதற்கான திட்டத்தை தோ்தல் ஆணையம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிவடையும். அடுத்த வருடமும் ஜனவரி மாதம் வாக்காளா் தினத்தின்போது, புதிய வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்.
இதுகுறித்து, தோ்தல் துறை வட்டாரங்கள் கூறியதாவது :
ஆசிரியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா். ஆனால், அவா்கள் இப்போது கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பணிகளை முகாம்கள் மூலம் மேற்கொள்வது, வட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பம் விநியோகித்து செயல்படுத்துவது போன்ற வழக்கம் போல் மேற்கொள்வது சிரமம். ஆகவே, இந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் முழுவதும் இணையம் வழியாகவே செயல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. செப்டம்பரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிளை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் ஆலோசித்துள்ளது.
தமிழக அரசு இணையதளம் வழியாக திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். இணையதளம் வழியே அளிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் ஆகலாம் என தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.