செல்போன்னில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதற்கான அபராதத்தை உத்தரபிரதேச அரசு உயர்த்தியுள்ளது. போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. இன்று முதல் உத்தரப்பிரதேசத்தில் இந்த விதி அமலுக்கு வந்துள்ளது. வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் விபத்தில் சிக்க நான்கு மடங்கு வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.