ரஜினி ஒரு வழியாக அரசியலுக்கு வந்துவிட்டார், இது ஒரு வகையில் பதுங்கி பாயும் தந்திரம் போல் தான். அதாவது, சரியாக தேர்தல் நேரம் பார்த்து பாயும் ஒரு வியூகம், ரஜினி அதை சரியாக செய்திருக்கிறார்.
தலைவர் ஒரு வழியாக தமிழக தர்பாரில் நுழைந்து விட்டார்.
எனவே இந்த தேர்தலில் எதிர்ப்பு, கட்சி மாற்றம் என பல குழப்பம் தமிழ்நாட்டில் ஏற்பட உள்ளது.
இந்த குழப்பம் நிச்சயம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். திமுகவின் தலைமை தில்லுமுல்லுக்கு இடையில் ரஜினியின் கட்சி பெரும் அதிர்வை ஏற்படுத்தும்.
அதிமுகவில் இன்றும் அமைச்சர் அளவில் உள்ள பலர் ரஜினியின் மனமார்ந்த ரகசிய ரசிகர்களாக உள்ளனர்.
எனவே, அவரின் அரசியல் வறுகை ஒரு பெரும் புயலாய் இங்குள்ள கட்சிகளிடையே பலத்த அதிர்வினை ஏற்படுத்த முடியும்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க ரஜினி தனியாக நிற்பாரா? இல்லை தகுந்த கூட்டணியுடன் வருவாரா? என்பதற்கெல்லாம் பதில் காலமே சொல்ல வேண்டும்.
இனி பல காட்சிகள் இடையே பரபரப்பு ஆரம்பம்.
இது நிச்சையம் அவரின் பாஷா படம் அளவு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். என்பதில் சந்தேகம் இல்லை.
ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தில் பொங்கினாலும், அதில் ஒரு சிலருக்கு பெரும் குலப்பம் ஏற்படுகிறது. ஏனெனில், ரஜினி டிசம்பர் 31 என சொன்னாரே தவிர எந்த வருடம் என சொல்லவே இல்லை.
ஏன் என்றால் முத்து படத்தில் வருவது போல் “நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்.” என்று அப்போதே கூரிவிட்டார் ரஜினி.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு நல்லதுதோ! இல்லையோ! ஆனால், வராமல் இருப்பது அவருக்கு நல்லது. ஏனெனில், அரசியல் என்பது ஒரு தங்கம் நிறைந்த சாக்கடையாகும்.
அங்கு வெட்கம், மாணம், சூடு, சூரணை என எதுவும் இல்லாதவர்கள் தான் பலர். மேலும், ஆத்திரம் கோபம் என எதுவும் வரகூடாது, அப்படியே வந்தாலும் மறைத்துக் கொண்டு அமைதியாக அமரவேண்டும். அடிக்கடி மாற்றி பேச வேண்டும். இன்னும் பல செயல்களையெல்லாம் மனசாட்சியினை மண்ணில் புதைத்துவிட்டு செய்ய வேண்டும்.
ரஜினி அந்த அலவிற்கி இரங்குவாரா?
எனவே, பிரிவினைவாதம் திராவிடம் ஒழிந்து, இம்சை அரசியலான நாத்திகமும் ஒழிந்து, தேசியம் மலர அவரால் ஒரு நல்ல வழியினையும், நல்ல தலமையையும் உருவாக்கிகாட்ட முடியும், இந்த அதிசயம் நடக்கலாம்,
இதைத்தான் தமிழகமும் விரும்புகிறது.
என்னதான் ரஜினியின் முடிவு வரவேற்கதக்கதாக அமைந்தாலும், டிசம்பர் 31ம் தேதி வரை அனைவரும் காத்திருக்க வேண்டியது உறுதி. எனினும், அவரின் அறிவிப்பினை வாழ்த்தி வரவேற்போம்.