இந்திய கடற்படையினை எதிர்க்க கிளம்புவதாக கங்கணம் கட்டியது பாகிஸ்தான். மிக பிரமாண்ட கப்பல்களை கட்டி இந்தியாவின் கடல் ஆதிக்கத்தை முறியடிக்க போவதாக அது சொல்லிகொண்டிருந்தது.
பின்னர் தான் தெரிந்தது, இந்தியாவிடம் பிரமாண்ட கடல் உள்ளது. தங்களிடம் அது இல்லை என்று. ஆம் அவர்கள் கடல் எல்லை மிக குறுகியது, வங்கதேசம் பிரியாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் கடலில் இந்தியாவுக்கு பெரும் சவாலை கொடுக்க முடியும். ஆனால், இப்பொழுது கராச்சியினை, அண்டிய பகுதிகள்தான் அவர்கள் கடல்.
கடல் இல்லாவிட்டால் என்ன, இந்திய கப்பல்களை நொறுக்குவோம் என, சீனாவிடம் இருந்து சில விமானங்களை வாங்கியது பாகிஸ்தான். ஆனால், அதிர்ச்சி காத்திருந்தது.
அது 1970ம் ஆண்டுகளில் ரஷ்யா சீனாவுக்கு விற்ற அதே தொழில்நுட்பம், அதை புது பெயின்ட் அடித்து பாகிஸ்தான் தலையில் கட்டிவிட்டது சீனா.
விஷயம் தெரிந்தும் திருடனுக்கு தேள்கொட்டிய கதையாக வெளியில் சொல்லமுடியாமல் அழுது கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்.