பாரதம் பல பராக்கிரம பண்புகளை கொண்டது. கடந்த 17 ஆண்டுகளாக சீனா போராடி கட்டமைத்த தொழில்நுட்ப பண்புகளை கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் எட்டிப் பிடித்து சாதித்து இருக்கிறார்கள் நம் இந்தியர்கள். இது குறித்து ஓர் பார்வையே இப்பதிவு.
நம்மில் பலருக்கும் நம் பலம் தெரிவதில்லை, அதுபோலவே நம்மவர்களின் சாதனங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதில்லை. அப்படி பட்ட ஒரு விஷயம் தான் தகவல் தொழில்நுட்ப புரட்சியினை சரியாக அவதானித்து கடைக்கோடி இந்தியனுக்கு சேர்ப்பதில் பெரும் சிக்கலாக, சவாலாக உள்ளது. நம்மை காட்டிலும் இந்த தளத்தில் சீனா வெகுசிறப்பாக கடந்த காலத்தில் இருந்தே கையாண்டு வருகிறது.
இதனை சொல்லியே ஆக வேண்டும்.
ஆனால், சமீப காலங்களில் இந்நிலை மாறி நாம் முழு வீச்சில் உலக போட்டியாளராக பல இடங்களில் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். அவற்றில் முதல் பத்து துறைகளில் இருப்பது தகவல் தொழில்நுட்பமும் ஒன்று. அதில் இன்று வரை சீனா தான் முன்னோடி.உலக அளவில் அவர்களால் மட்டுமே 5G தொழில்நுட்ப சேவைகள் உடனே உலக அளவில் வழங்க முடியும் என்கிற நிலை இருந்தது, இஃது கடந்த ஆண்டு நிலை.
இதற்கு உலக அளவில் முட்டுக்கட்டை போட்டது நம் இந்திய மத்திய அரசு தான். 2018 ஆம் ஆண்டு வாக்கில் 5G தொழில்நுட்ப சேவைகள் சோதனை அடிப்படையில் வழங்க அனுமதி அளித்திருந்த நிலையில் அதனைக் கொண்டு நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளை சீன ஏஜன்சிகள் மூலம் சீன அரசுக்கு பகிர கூடிய சாத்தியக்கூறுகளை நம்மவர்கள் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்தனர்.
இஃது உலக அளவில் விஸ்வரூபம் எடுத்தது அமெரிக்காவில் தான். ஆனால் காலம் கடந்து இருந்தது, அவர்களின் அதாவது அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சீன வசம் சென்றிருந்தது. இதனை முன்னிட்டு பற்பல சர்ச்சைகளும் சீனாவை நேரிடையாக தாக்கும் பல விஷயங்களை அமெரிக்கா செய்ய ஆரம்பித்தது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிய வர பல நாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது. 5G சேவைகள் நிறுத்தி வைக்க பட்டது. இவை எல்லாம் 2019 ஆண்டு வாக்கில் நடைபெற்ற சம்பவங்கள்.
சீனா அமெரிக்காவை நேரிடையாக எதிர்த்ததின் நிஜ பிண்ணனி இது தான். வாஹே ( HUAWEI mobile, HTC ) நிறுவன செல்போன் இயங்கு தளங்கள் மூலமாக சீன உளவு துறை இயங்கியதாக அதிகார அமைப்புகளில் கண்டுபிடிக்க பட்டது.
அதனால் இன்று வரை கூட இதன் நிர்வாக இயக்குனரில் ஒருவரும், இந்நிறுவனத்தின் அதிபரின் மகளை கனடா வீட்டு காவலில் வைத்திருக்கிறது.ஆனால் பின்னணியில் பல சீன தயாரிப்பு மென்பொருள் தொழில்நுட்ப பிரிவினர் இருந்தது தெரியவந்த போது ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. காரணம் சீன சட்டம் அப்படி பட்டது என்று சால்ஜாப்பு சொல்லி தப்பித்து விட்டது.
உலக அளவில் பிரபலமான பல செயலிகளில் திட்டமிட்டு இது போன்ற செயல்களை சீனா செய்து வந்திருப்பது தெரிய வந்துபோது உலக மென்பொருள் தொழில்நுட்ப பிரிவினர் ஆடித் தான் போனார்கள்.
உதாரணமாக tiktok உலகம் முழுவதும் செல்போன்களில் கிளை பரப்பி செல்போனில் இடம் பெற்று அனைத்து தகவல்களை உடனுக்குடன் சீனாவிற்கு, சீனா அரச ஏஜென்சிகள் வழியாகவே பரிமாற்றம் செய்து இருக்கிறார்கள்.
இப்படி சொன்னால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். Tiktok பட்டிதொட்டி எங்கும் தெரிந்த அளவிற்கு அதன் பின்னணியில் இருந்து இயங்கும் அதன் தாய் நிறுவனமான #பைடான்ஸ் குறித்து தெரியாது. இது கூட அலிபாபா நிறுவனங்களின் கிளை நிறுவனம். இவர்களே உலக அளவில் பிரபலமான oppo, vivo, redmi, realme,mi ஆகிய செல்போன் தயாரிப்பாளர்களின் பங்குதாரர்கள் மற்றும் செல்போன் இயங்கு தள டெம்ப்ளேட் மென்பொருள் வழங்குபவர்கள்.
இதனை கொண்டு இவர்கள் என்னவெல்லாம் செய்தார் என பார்க்க போனால் 400 பக்க புத்தகங்களின் எழுதும் அளவில் இவர்களது ஆக்டோபஸ் கரங்கள் நீளும். தனிநபர் தகவல்கள் முதற்கொண்டு இந்த வகை செல்போன்கள் பயன்படுத்திய காலத்தில் இதில் உள்ளிட்டப்பட்ட அனைத்து தகவல்களும் அவர்கள் மூலம் இணையம் வழியாக இணையத்தில் பயன்படுத்தப்பட்ட, இணையம் பயன்பட்ட வங்கி கணக்கு வரை தகவல்கள் அனைத்தும் தரவுகளாக கடந்த காலத்தில் சீனா பெற்று வந்திருக்கிறது. இதில் வெளிவந்த ரகசியம் மலைக்கவைக்கும் அளவில் உள்ளது.
இவை மட்டும் அல்லாமல் இணையத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளையும் சீனா பல்வேறு குழுக்களை உருவாக்கி தன் தாய் மொழியோடு இதனையும் கற்க ஏற்பாடு செய்து வைத்து இருக்கிறார்கள்.உலக அளவில் 117 மொழிகளில் எழுத பேச கற்பிக்கும் ஆசிரியர்கள் கொண்டு ஒரே நாடு சீனா தான். இதனை கற்க சீனா ஊக்கத் தொகை வேறு தருகிறார்கள்.
(நம் தமிழகத்தில் உள்ள சூழ்நிலையை இந்த தருணத்தில் நினைத்து பாருங்கள்)
தொல்காப்பியருக்கு பிறகு தமிழ் மொழியின் நெளிவு சுளிவுகளை அக்குவேறு ஆணிவேராக அலசி உயிர் எழுத்து 12, மெய் எழுத்துக்கள் 18 ஆகியவற்றோடு வெறும் 28 எழுத்துக்களை சேர்ந்தார் போல் மாற்றம் செய்து மென்பொருள் வடிவமைத்து தயாரித்து இருக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது?
இது குறித்து பின்னர் பார்ப்போம், இப்போது விஷயத்திற்கு வருவோம்.
அது சரி அது என்ன 5G என்பவர்களுக்கு. இதில் அதன் வேகம் மாத்திரம் பிரதானம் அல்ல, இந்த தரவு தளத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பயன்படுத்தக்கூடியதாக இணையத்தின் வேகம் டெராபைட்டில் இருக்கும். சாதாரண வார்த்தையில் சொன்னால் ஒரு முழு நீள தமிழ் படம் ஒன்றை 40 விநாடிகளில் தரவிரக்கம் செய்ய முடியும்.
அப்படி என்றால் 6G. நம்ப முடியாத பல சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கிறது அது. இன்றுள்ள நிலையில் விவரித்து சொன்னால் நம்ப முடியாத மாயாஜால கதை போல தோன்றும். AI ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் விருட்சுவல் இமேஜினரி ஆகியவற்றை கொண்டு செயல் படும் ஒன்றாக உருமாற இருக்கிறது. அவதார்,பாகுபலி படத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைத்தது நீஜம் என்றால் வரவிருக்கும் 6G தொழில்நுட்ப பண்புகளைக் கொண்டு உங்களால் அந்த படங்களில் நீங்கள் பார்த்த இடங்களில் உலவ முடியும். அங்கு உள்ள மரத்தின் பழங்களை பறித்து சுவைக்க முடியும் என்கிறார்கள். அதாவது தொடு உணர்வு திறன் பெற்றதாக இருக்கும் என அடித்து சொல்கிறார்கள்.
உதாரணத்திற்கு சொல்லப்பட்ட மேற்சொன்ன அனைத்தும் நிஜத்தில் இன்னும் பல சாத்தியங்களோடு இருக்கும். கற்பனை போன்று தற்போதைக்கு தோன்றிடும் இஃது, செயல் வடிவம் பெற சீனா கடந்த வாரம் 13 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா, ஆனால் அது தான் இன்றைய நிதர்சனமான உண்மை.அவையாவும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக சீனா நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
இதேபோன்ற தொழில்நுட்ப சாதியக் கூறுகளை நம் இந்திய தொழில்நுட்ப பிரிவினர் கடந்த 16 மாதங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.அதில் சில குறிப்பிட்ட தக்க வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். இஃது தற்சமயம் ஓர் பகுதியாக டிஜிட்டல் கரன்சியாக பிட்காயினுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது. செயல் வடிவம் பெற்ற இது பொது வெளி பயன்பாட்டிற்கு இந்திய அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது. இதனை உத்தேசித்தே முன்னர் இந்திய அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று உலக அளவில் நாம் நம் பண மதிப்பினை இனி வரும் காலங்களில் இழக்காமல், அதே சமயம் துரித கதியில் டிஜிட்டல் கரன்சிக்கு மாறிட முடியும்.இதனால் பொருளாதார மதிப்பிழப்பு உலகிலேயே மிக குறைந்த அளவில் நம் இந்தியாவில் தான் இருக்கும்.
இஃது மிகப்பெரிய சாதனை. ஆனானப்பட்ட அமெரிக்காவில் இதன் சாதியக்கூறு 67% மாத்திரமே. சீனாவில் 89% இந்தியாவில் 94% என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை மேலும் விவரித்து ஜல்லியடிக்க விரும்பவில்லை. ஆனால் இவையெல்லாம் தொழில்நுட்ப பண்புகள்.
👆 இப்படி சொல்ல முடியும்.
இன்று உலக அளவில் 5G தொழில்நுட்ப சேவைகள் வழங்க சீனாவிற்கு மாற்றாக நம் இந்திய நிறுவனமான ஜியோ தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் அனுமதி மற்றும் கொரானா காலத்திற்கு பின்னான வர்த்தக வளர்ச்சியை எதிர் பார்த்து காத்திருக்கிறது.
இதற்கான முஸ்தீப்புகள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. இதன் பொருட்டே அமேசான் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் இடையே வர்த்தக உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் கூகுள் நிறுவனமும் கணிசமான அளவிற்கு இந்த திட்டங்களுக்கு முதலீடு செய்துள்ளது. மேலும் 2023 ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் 5G சேவைகளை முழுமையாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும்படியாக ஜப்பான் தானாக முன்வந்து இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தங்கள் செய்துக்கொண்டு உள்ளது.
சீனா 2030ஆம் ஆண்டை 6G தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் சேவைகளை தரும் அளவுக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இந்தியா 2026 ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த சேவைகளை தர முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சரியாக சொன்னால் 2026ஆம் ஆண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு அம்புலிமாமா கதைகள் சொல்வது நின்று போய், அம்புலியில் வைத்தே பாடம் நடத்தப்படும். சிங்கம் புலி உலவும் காட்டில் வைத்து பஞ்ச தந்திர கதைகள் சொன்னது போய், அவைகளே நேரிடையாக விருட்சுவல் இமேஜினரி மூலம் பாடம் நடத்தும்.
ஆக மொத்தத்தில் பாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா நேரிடையாக ஜீவாத்மா குறித்தும் கீதை குறித்தும் உங்கள் அருகில் அமர்ந்து பாடம் நடத்துவார்.
ஜெய் ஹிந்த்