ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்த அதி உச்ச செயல்திறன் கொண்ட வான் பாதுகாப்பு சாதனங்கள் S400 யை இந்தியாவிற்கு வழங்கிவிட்டது. அவைகள் பகுதி பகுதிகளாக தற்சமயம் இந்தியாவிற்கு வந்து கொண்டு இருக்கிறது.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் அதனை மேற்கு எல்லையில் நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது நம் தேசம். சரியாக சொன்னால் பாகிஸ்தானை ஒட்டி வரும் பஞ்சாப் மாநிலத்தில் காஷ்மீர் பிராந்தியத்தை முழுமையாக பாதுகாக்கும் வண்ணம் இந்த வான் பாதுகாப்பு சாதனங்களை பொருத்த இருக்கிறது இந்தியா.
இதனை நிச்சயமாக தந்திரமான காய் நகர்த்தல் என்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் எல்லைகருகில் நம் தேசத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று பார்த்தால் அது சீனா தான். தவிர அவர்கள் தான் ரஷ்ய தயாரிப்பு S400 வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியாவுக்கு எதிராக நிலை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். நியாயமாக பார்த்தால் தற்போது நமக்கு வரும் இந்த S400 சாதனங்களை லடாக்கிலோ அல்லது அருணாசலப் பிரதேசம் ஒட்டிய பகுதிகளில் தான் நிலை நிறுத்தி இருக்க வேண்டும். அப்படி தான் உலக ராணுவ வல்லுனர்கள் யோசிப்பார்கள்.
ஆனால் நம் தேசமோ இதனை காஷ்மீர் ஒட்டிய பகுதிகளில் நிலை நிறுத்த போகிறது.
ஏன் இப்படி?????
காரணம் இருக்கிறது.
இந்திய ராஜதந்திர வட்டாரங்களில் சீனா இந்தியாவை தாக்குவதென்றால் அது நிச்சயமாக தன் தேசத்தின் ஒரு பகுதி என சொல்லிக்கொள்ளும் லடாக் மற்றும் அருணாசலப் பிரதேசம் அருகில் இருந்து இருக்காது.அது சர்வ நிச்சயமாக பாகிஸ்தானிய பிராந்தியமாகவே தான் இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.
இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. சமீபத்திய நாட்களில் சீன ராணுவத்தினரின் நடமாட்டங்கள் பாகிஸ்தானிய எல்லையோரங்களில் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களின் கட்டுப்பாட்டில் சில பல ராணுவ தளங்களே பாகிஸ்தான் பகுதிகளில் இருக்கின்றது.
போர் சூழல் ஒன்று உருவானால் நிச்சயமாக சீனா இந்த பகுதிகளில் இருந்தே இந்திய ராணுவத்தினரை எதிர்கொள்ளும். இதற்கு பாகிஸ்தானும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மற்ற இரு இடங்களிலும் அதாவது லடாக் மற்றும் அருணாசலப் பிரதேசம் அருகில் சீனா தன்னந்தனியாகவே இந்தியாவோடு போரிட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் இந்த பிராந்தியத்தில் அப்படியல்ல.
எப்படியும் இந்தியா, பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை மீட்டெடுத்து விடும் என்று நினைப்பில். அப்படி தான் அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரை முன் நகர்த்தி பின்னணியில் இருந்து சீனா செயல்பட விரும்புகிறது. அதனை ஒட்டியே அவர்களின் திட்டமிடல்களும் இருக்கின்றன. கேட்டால் அந்த பிராந்தியம் ஊடாக பயணிக்கும் BRI திட்டங்களுக்கான பாதுகாப்பு என சால்ஜாப்பு சொல்லி சமாளித்து விடலாம் என்கிற நினைப்பு அதற்கு ஓடிக் கொண்டு இருக்கிறது.
அடுத்து வரும் ஆறேழு மாதங்கள் இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒரு காலக்கட்டம். அப்படி தான் நாள் குறித்து இருக்கிறார்கள். காஷ்மீர் பகுதியை முழுவதுமாக மீட்டெடுக்க. இந்த இடத்தில் அதாவது பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் சீனா செயல்படுத்தி வைத்திருக்கும். வளைந்திருக்கும் இடங்களில் என்னமாதிரியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது வரை இந்தியா தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
சீனாவும் அதனை நன்கு உணர்ந்தே இருக்கின்றது. ஆதலால் தான் பாகிஸ்தான் ஊடாக வரும் BRI திட்டங்களுக்கான நிதியை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே நிறுத்தி வைத்து விட்டனர். செலவு செய்த தொகையை வேறு திருப்பி தர பாகிஸ்தானை போட்டு குடைந்து கொண்டு இருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க. இந்தியாவின் இந்த நகர்வில் வேறோர் சூட்சுமமும் இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். தற்போது இந்த பகுதியில்தான் நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஆஃப்கானிஸ்தான் முதல் பாகிஸ்தான் வரை உள்ள எல்லையில் யார் எந்த மாதிரியான ஆயுதங்களுடன் நடமாடுகிறார்கள் என்பது சர்ச்சைக்குரிய சங்கதியாகவே இருக்கிறது. போதாக்குறைக்கு ஆஃப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் விலகி சென்ற போது முழுமையாக இல்லாமல் ஆயுத தளவாடங்களை இந்த பிராந்தியத்திலேயே போட்டு விட்டு சென்று இருக்கிறார்கள்.
அவர்கள் வேண்டும் என்றே அவ்வாறு செய்திருக்கிறார்கள் என்கிற ரீதியிலான புலனாய்வு தகவல்களும் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதாவது அந்த ஆயுதங்களை கொண்டு அவர்களுக்குள்ளாகவே அடித்து கொண்டு சாகவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது என காரணம் சொன்னாலும். இதன் பின்னணியில் வேறு ஒரு திட்டமிடல் இருக்குமோ என இந்தியா சந்தேகிக்கிறது.
அது அந்த ஆயுதங்களை.. பாகிஸ்தானோ அல்லது சீன ஆதரவு இயக்கங்களோ.வேறு எந்த ஒரு பெயரில் உள்ள அமைப்பினரோ மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராக பயன் படுத்த கூடும் என்கிறார்கள் அவர்கள்.
சீனா ஏற்கனவே ஒரு கண் போனாலும். மற்றவருக்கு. என்கிற மனநிலையில் தான் தற்போது இருக்கிறது. கல்வானில் வாங்கிய அடி அப்படி. மேலுக்கு சிரித்தாலும் பழி தீர்த்துக்கொள்ள காத்துக் கொண்டு இருக்கிறது. அந்த பிராந்தியத்தில் உள்ள மற்றவர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.
பஞ்சாப் மாநிலம் மட்டும் இரண்டு நாடுகளிலும் வருகிறது. ஒன்று இந்தியா மற்றொன்று பாகிஸ்தான்.
இவர்களை சிலரை அதாவது சீக்கியர்களை தயார் படுத்தி தூண்டிவிட்டு விவசாயிகள் என்கிற போர்வையில் இந்தியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இன்றளவும் இது நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது.இதன் பின்னணியில் அமெரிக்க NGO களின் வழியிலான #கை ங்கரியம் இருப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.
இவர்களின் யாரேனும் அல்லது ஏதோ ஒரு அமைப்பு ஊடாக இந்தியாவை தாக்கும் சந்தர்ப்பங்கள் மிக அதிகமாக இருக்கிறது. இங்கு எதிரி யார் என்பது அவ்வளவு எளிதில் #கை காட்ட முடியாத சூழ்நிலை வேறு நிலவுகிறது. போதாக்குறைக்கு அமெரிக்க உளவு துறை பாகிஸ்தானிய உளவு துறையினரோடு இன்றளவும் ஒட்டி உறவாடி கொண்டு இருக்கிறது. இவையெல்லாம் கணக்கில் கொண்டே இந்த ரஷ்ய தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களை இங்கு இந்த பிராந்தியத்தில் நிலை நிறுத்தி வைக்க உத்தேசித்து இருப்பதாக சொல்கிறார்கள்.
இது ஒரு அட்டகாசமான வரவேற்க வேண்டிய திட்டமிடல்.
இவர்களில் யார் எல்லை மீறினாலும் பிடித்து சாத்த இந்தியா எல்லையில் தயாராக நிற்கிறது.
இந்திய சீன எல்லையில் மிக வலுவான வான் படையை நிறுவி பாதுகாக்கும் அதே நேரத்தில் பாகிஸ்தான் ஒட்டிய எல்லையில் அதி நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை நிலை நிறுத்த திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை ஈடுபட்டு வருகிறது.
இன்று உள்ள சூழ்நிலையில். எந்த பக்கம் யார் வந்தாலும்… எத்தனை பேரோடு வந்தாலும் அடித்து தொம்சம் செய்ய. 20-40 நாட்கள் தாங்கி நின்று தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வெகு நிச்சயமாக மிகப் பெரிய சமாச்சாரம். நமது ராணுவத்தினரின் ஒரு வார தாக்குதலை கூட தற்போது இந்திய எல்லையில் உள்ள எந்த ஒரு நாடும். சீனா உட்பட தாக்கு பிடிக்க முடியாது என்கிறார்கள்….. அவ்வாறான சூழலில்… பூகோள ரீதியாக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு நம் தேசத்தில். வீரியத்துடன் செயல்படும் நம் இந்திய ராணுவத்தினரை எதிர்கொள்ளும் துணிவு இந்த உலகில் யாருக்கும் இல்லை என்பதே இன்றைய தேதியில் நிதர்சனமான உண்மையாகும்.
ஜெய் ஹிந்த்.