பாஜக இளைஞரணி மாநில தலைவர் திரு.வினோஜ் ப செல்வம் ஏற்பாடு!
பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
வருகின்ற 13-ஆம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகள் அதற்கு தயாராகி வருகின்றனர்.
பாஜக இளைஞரணி தேசிய தலைவர் பூனம் மகாஜன் மற்றும் பாஜக மாநில தலைவர் டாக்டர் எல்.முருகன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் பஸ் வசதி இல்லாத பகுதிகளில் உள்ள நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகளுக்கு, வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க பாஜக இளைஞரணி முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். வாகன வசதி தேவைப்படும் மாணவ – மாணவிகள் வசதிக்காக மாவட்ட வாரியாக தொடர்பு மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, இலவச வாகன உதவி தேவைப்படும் மாணவ-மாணவிகள், வருகிற 10-ஆம் தேதி (10.09.2020) மாலை 6 மணிக்கு முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயர், வீட்டு முகவரி, தேர்வு எழுதும் மையம், தேர்வு மைய முகவரி ஆகிய தகவல்களை மாணவர்கள் தெரிவிக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச வாகன வசதி ஏற்படுத்துவது தொடர்பான மாநில பொறுப்பாளராக, பாஜக இளைஞரணி மாநில செயலாளர் ராகுல் தினேஷ் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து, அந்த குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு இலவச வாகன வசதி ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
பாஜக இளைஞரணியின் இந்த சேவையை நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகள் பயன்படுத்தி, தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக சாதனை நிகழ்த்த இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வினோஜ் ப செல்வம் குறிப்பிட்டுள்ளார்.