செஞ்சி கோட்டையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. அத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. ராஜா தேசிங்கு முதல் இன்றைய இராணிப்பேட்டை வரையிலும் பல சரித்திர சான்றுகளை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது.
அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. புகழ் பெற்ற இந்திய பாரம்பரிய கலைசிற்பங்களையும். சொத்துக்கள் அனைத்தையும் சின்னாபின்னமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் அரவணை பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. காப்புரிமை கொண்ட ஒன்று. இன்று அதன் தயாரிப்பில் உருது மொழி வாசகங்கள் இடம் பெற்று இருப்பதோடல்லாமல். ஹலால் முத்திரையும் பொறித்து விற்பனைக்கு விட்டு இருக்கிறார்கள்.
இங்கு ஹலால் என்பது என்னவென்று முன்னரே பல முறை நம் பதிவுகளில் பார்த்து இருக்கிறோம். அப்பொழுதே நம் பதிவில் குறிப்பிட்டு இருந்தோம். இது ஏதோ இறைச்சி விஷயம் மாத்திரம் அல்ல. நாளையே வேர் விட்டு கிளை பரப்பி நம் வர்த்தகத்தில் வந்து நிற்கும் என்று சொல்லி இருந்தோம். இதோ இன்று இறைவனின் அருட்பிரசாதத்தில் வந்து நிற்கிறது.
இதனையே நம் இந்துக்கள் இது போல் ஒன்றை செய்தால்.
செய்யமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.
செய்தால், இஸ்லாமிய சமுதாயம் அதனை ஏற்குமா?
ஏற்கனவே இன்றைய தேதியில் வெள்ள பாதித்த பகுதிகளில் வழங்கப்படும் உணவு பதார்த்தங்களில் இஸ்லாமிய சமுதாய பெரியர் எச்சில் படுத்தி அதனை கலந்து விநியோகம் செய்யும் காட்சிகள் அடங்கிய விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதாக்குறைக்கு பல இடங்களில் சிலபல அத்துமீறல்களை. அடாவடி தனங்களை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவையெல்லாம் சமூக அநீதி என்பதனை உணர்ந்தார் போலவே தெரியவில்லை.
இப்போது இந்த பிரச்சினை. கடந்த திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையை குத்தகை விட்டதாக சொல்லி, ஒரு மலையையே காணாமல் போக செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மலைகள் இருந்த போதிலும் குறிப்பிட்ட மலையை மாத்திரமே குறிவைத்து மொத்த மலையையுமே குவாரி என்கிற பெயரில் காலி செய்து விட்டனர். அந்த சமயத்தில் கல்குவாரி எடுத்தது ஒரு இஸ்லாமியர் என்பது போலவே பதிவுகள் சொன்னது.
இதோ இந்த முறை அப்படி எல்லாம் ஒன்றுமே தேவையில்லை போலிருக்கிறது. நம் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் எந்த ஒரு நடைமுறையை பின்பற்றாமல் செஞ்சி மலையை கல்குவாரி போலும் வெடிவைத்து தகர்த்து பெயர்த்து எடுத்து வருகிறார் என்கிற ரீதியிலான செய்தி வந்தவண்ணம் இருக்கின்றன. போதாக்குறைக்கு மலை குடைந்து வெடி வைத்து தகர்க்கும் வேலை இந்த அடைமழை காலத்தில் விடாமல் நடைபெற்று வருகின்றன அங்கு.
எதற்காக இத்தனை அவசரம் என்பது தான் புரியவில்லை. இத்தனைக்கும் இந்த பகுதி மத்திய தொல்லியல் துறை வசம் இருக்கிறது. ஆனாலும் வேலை நடக்கிறது. ஏற்கனவே இந்த செஞ்சி கோட்டை கோவிலுக்கு சொந்தமான தூண்கள் தான் பாண்டிச்சேரி கடற் கரையில் உள்ள காந்தி சிலை சுற்றி அலங்காரமாக நிறுவப்பட்டுயிருக்கிறது. அதனையே இன்னும் மீட்டெடுத்த பாடில்லை. அதற்குள்ளாகவே இப்போது மலையையே உடைத்து கொண்டு இருக்கிறார்கள்.
நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கு தொடுத்து வென்று வரும் சமயத்தில். ஒரு சிறு கற்கள் இருக்கப் போவதில்லை. அப்படி என்றால் இதற்கு என்ன தான் தீர்வு????