தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் டாக்டர்.எல்.முருகனின் அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் 10 லட்சம் இல்லங்களில் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கர் ஒட்டவும், 1 லட்சம் இல்லங்களுக்கு “கந்த சஷ்டி கவசம்” புத்தகம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இன்று (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி நிர்வாகிகளும் தொண்டர்களும் வீடு வீடாக சென்று “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். அதேபோல “கந்தசஷ்டி கவசம்” புத்தகங்களையும் வழங்கினார்கள்.
பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம், சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் ரோடு, அண்ணா பிள்ளை தெரு சந்திப்பில் உள்ள வீடுகளில் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கரை ஒட்டி, தொடங்கி வைத்தார். அதேபோல “கந்த சஷ்டி கவசம்” புத்தகங்களையும் அவர் வீடுவீடாக சென்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம், வினோஜ் ப செல்வம் கூறியதாவது:-
இந்து மதத்தை மட்டும் அல்ல, எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் அதனை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை சாமி கும்பிட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. கோவிலுக்கு வாருங்கள் என்று அவர்களை யாரும் அழைப்பதில்லை. அது அவர்களின் உரிமை. அதோல சாமி கும்பிடுவார்களையும், கோவிலுக்கு செல்பவர்களையும், அவர்களின் நம்பிக்கையும் காயப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது.
கறுப்பர் கூட்டம் என்கிற இந்து விரோத அமைப்பினர் வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், இந்து பெண்கள் தினமும் பாடி முருகபெருமானின் அருள் பெற்று வரும் கந்த சஷ்டிக் கவசத்தையும், வேலையும் மிக கேவலமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதோடு மட்டும் நிற்காமல், பெண்களையும் இழிவு படுத்தி உள்ளனர். பெண்களின் உறுப்புக்களை மிகவும் ஆபாசமாக வர்ணித்து உள்ளனர்.
ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களையும் புண்படுத்திய இந்த செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம்கூட தெரிவிக்கவில்லை என்பது வேதனையான ஒன்று.
கறுப்பர் கூட்டத்தில் இருப்பவர்கள், திமுகவினர் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. திமுக, இதன் பின்புலத்தில் இருந்து இயக்கி உள்ளது. ஆகவேதான் இந்த இழி செயலை மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
எனவே முருகப்பெருமானையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவு படுத்தியவர்களை கண்டிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் பத்து லட்சம் வீடுகளில் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கர் ஒட்டுவது என்று முடிவு செய்தோம். அதன்படி இன்று தமிழகமெங்கும் பாஜக இளைஞரணி நிர்வாகிகளும், தொண்டர்களும் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கரை வீடுகள்தோறும் சென்று ஒட்டி வருகின்றனர்.
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் ரோடு, அண்ணா பிள்ளை தெரு சந்திப்பில் உள்ள வீடுகளில் நான் ஸ்டிக்கர் ஒட்டும் புனிதப் பணியை தொடங்கி வைத்தேன். துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கர் ஒட்டி உள்ளோம். அதேபோல 5 ஆயிரம் கந்த சஷ்டி கவசம் புத்தகங்களையும் வழங்கியுள்ளோம்.
வெற்றிவேல்! வீரவேல்!!இவ்வாறு பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் கூறினார்.
மக்களிடம் வெற்றிவேல் வீர வேல் ஸ்டிக்கர் ஸ்டிக்கர் ஓட்டும் போது மக்கள் எதற்காக ஒட்டுகிறீர்கள் என பாஜகவினரை கேட்டுள்ளார்கள்,பாஜக நிர்வாகிகளைப் கறுப்பர் கூட்டம் வீடியோவை போட்டு காண்பித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் யார் இந்த கறுப்பர் கூட்டம் என விசாரித்துள்ளார்கள் .கருப்பர்க்கூட்டம் பெரியார் வழி அமைப்பு மற்றும் வீரமணி போன்றோர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றும் பாஜகவினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், வீரமணி திமுகவில் கூட்டணியில் உள்ளார் ஆனால் திமுக தலைவர் இதை கண்டிக்கவில்லை என்று மக்களிடம் பாஜகவினர் கூறியுள்ளார்கள், என்ற தகவல் அறிவாலயத்திற்கு கிடைத்துள்ளது. இதனால், திகைப்பில் உள்ளார்களாம் திமுக தலைமை