வாட்ஸ்அப்பில் 138 புதிய எமோஜிகளைக் சேர்ப்பதற்கான சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த எமோஜிகள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.197.6 இல் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு அனிமேட்டட் ஸ்டிக்கர்கள் அண்மையில் வாட்ஸ்அப்பில் அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து பீட்டா வெர்ஷனில் இந்தப் புதிய எமோஜிகள் காணப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப்பைப் பொறுத்தவரையில் எமோஜிகளும், ஸ்டிக்கர்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பத்து வரி மெமேஜ்களைக் காட்டிலும் ஒரு எமோஜி போதுமானதாக அமைகிறது. புதிதாக வர இருக்கும் எமோஜிகள், தற்போது இருக்கும் எமோஜிகளைக் காட்டிலும் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது. அதவாது, கலர் டோன், உடைகள், ஹேர் ஸ்டைல், நிறம் போன்றவை புதிய எமோஜிகளில் முற்றிலும் மாறுபடுகிறது.
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை WABetaInfo என்ற இணையதளம் கண்காணித்து, வாட்ஸ்அப் தொடர்பான புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இப்போது இந்த இணையதளம் தான் 2.20.197.6 பீட்டா வெர்ஷனில் வந்துள்ள புதிய எமோஜிகளைப் பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. புதிய எமோஜிகளைப் பார்க்க விரும்பும் பயனர்கள், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை APK ஃபைலாக பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.
சென்ற வாரம் வாட்ஸ்அப்பில் ‘மியூட்’ வசதியில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டது. ஒரு குழுவில் இருந்து வரும் மெசேஜ்களை, தனி நபரிடம் இருந்து வரும் மெசேஜ்களை ஆயுட் காலத்திற்கும் அதன் நோட்டிபிகேஷனை மியூட் செய்து கொள்ளலாம். அதே போல், மெசேஜ் எக்ஸ்பரி என்ற வசதியும் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வந்தன. இதன் மூலம் ஒரு மெசேஜை டைம் செட் செய்து அனுப்பலாம். அந்த நேரத்திற்குப் பின், குறிப்பிட்ட வாட்ஸ்அப் மெசேஜ் தானாகவே அழிந்துவிடும்.