பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 18 கோடிக்கும் மேல் பண மோசடி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, துரிஞ்சாப்புறம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட 18 ஒன்றியங்களில் கிசான் திட்டத்தின் கீழ் மோசடி நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திட்டத்தில், முறைகேடாக நிலம் இல்லாத 30 ஆயிரம் பேரை சேர்த்தது தெரியவந்துள்ளது.
மேலும், 18 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதும் அம்பலமாகியிருகிறது. போலி பயனாளிகளை சேர்த்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
மேலும் இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில், 60 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
இதனைத் தொடர்ந்து போலி பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டத்திலும் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.