தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு……
இன்று ரெம்டெசிவர் வாங்க சென்னை நேருவிளையாட்டு அரங்கில் கூடிய கூட்டத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்.
கூட்டநெரிசலில் மருந்து கிடைக்காத விரக்தியில், சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தையும் நடத்தினர்.
கோரோனா தொற்று உறுதிபடுத்தபட்ட சான்றிதழ் இருந்தால் தான் வழங்கபடுகிறது ரெம்டெசிவர்.
இது அனைவரும் அறிந்ததே.
அப்படியானல் கொரோனாவால்
பாதிக்கபட்டவர் அனுமதிக்கபட்டிருக்கும் மருத்துவமனைகளுக்கு, நேரடியாக அரசே வழங்கலாமே….
எதற்காக அதற்கென ஒரு விற்பனை மையம், காவல்துறை பாதுகாப்பு, நீண்ட கூட்டநெரிசல், பாதுகாப்பில்லாத நிலை,
தற்போது ரெம்டெசிவரை கள்ளசந்தையில் விற்பவர் மீது குண்டர்சட்டம் பாயும் என அறிவித்துள்ளீர்கள்.
சிறந்த நடவடிக்கை, பாராட்டுகள் முதல்வரே.!
ஆனால் நேரடியாக அரசு,மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கொரோனா உறுதி செய்யபட்டவர்களுக்கு,
அரசே அந்தந்த மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கினால்,
இந்த தடுப்பு நடவடிக்கையே தேவைபடாது.
அரசுக்கு செலவுகளும் மிச்சம்.
காவல்துறையினருக்கும், நீதிதுறைக்கும் பணிச்சுமை ஏற்படாது.
பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு செலவுகளை மிச்சபடுத்தி,
அதை ரெம்டெசிவர் க்கு மானியமாக வழங்கலாம்.
குறிப்பு: ரெம்டெசிவர் கொரோனா தொற்று தீர்வுக்கான மருந்து அல்ல, என பல மருத்துவர்கள் கூறிவரும் நிலையில்,
சில தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவரை கண்டிப்பாக கேட்பதாகவும் புகார் வருகிறது.
ரெம்டெசிவர் பற்றி மக்களிடம் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.