முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .
தொடர்ந்து மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசியதாவது .
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய் தொற்று பரவலை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுவருகிறார் .
மேலும் , முதலாவதாகவும் முக்கியமானதாக கருதப்படும் கோவிட் – 19 தடுப்பூசி அனைவருக்கும் செலுத்திடும் வகையில் திருப்பூர் மாவட்டம் நேதாஜி ஜவுளிப் பூங்காவில் 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணியினை ( 20.05.2021 ) அன்று தொடங்கி வைத்தார் .
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது .
தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தேவைக்கேற்ப இருப்பில் வைக்கப்பட்டுள்ளது .
மேலும் கொரோனா நோய்த்தொற்றிற்கு செலுத்தப்படும் தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்புத்தன்மையுடையது எனவே பொதுமக்கள் அனைவரும் கோவிட் -19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் .
தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் இம்முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார் .
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ. அண்ணாதுரை , இ.ஆ.ப. , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி துணை இயக்குநர் ( சுகாதாரப்பணிகள் ) மரு.செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர் .