விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண பொருட்களை திமுகவினர் வழங்கினர். புத்தூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான, சிவராஜ் அண்ணாமலை தனது சொந்த செலவில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் .
அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களான ஆட்டோ ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், சலவை செய்பவர், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள் அடங்கிய ஒரு நிவாரண தொகுப்பினை தனது சொந்த செலவில் வழங்கினார்.
முன்னதாக, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கவுதம சிகாமணி நிவாரண தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில், விழுப்புரம் மத்திய மாவட்ட துணைசெயலாளர் முருகன்,ஒன்றிய செயலாளர்கள் தங்கம்,ரவிசந்திரன்,பிரபு உள்ளிட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.