ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், யானை ஒரு பாகனைத் தாக்கியதில் அந்த பாகன் உயிரிழந்தான். அதனால், அந்த யானைக்கு மனநலம் சரியில்லை என்று முதுமலை காட்டிற்குள் அனுப்ப அறநிலையத் துறையும் அந்த யானைக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர். ஜான் பாட்சாவும் முடிவெடுத்துள்ளனர்.
ஓ அப்படியா? அப்போ அந்த யானையை அனுப்பிட வேண்டியது தான் என்று உங்களுக்குத் தோணுதா?
சில கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லுங்கள்.
சும்மா இருக்கும் யானை பாகனை ஏன் கொல்லப் போகிறது?
- யானையைக் கட்டிப் போட்டிருக்கும் இடத்தில் இருக்கும் சிசிடிவியை ஏன் இயங்க விடாமல் அணைத்து வைத்திருக்கிறார்கள்?
- காளிதாசுடன் சேர்ந்து பராமரித்து வந்த பாகன் பரணி திருச்செந்தூரிலிருந்து ஏன் மதுரைக்கு மாற்றப்பட்டார்?
- திருச்செந்தூர் கோவில் யானை எப்படி இறந்தது?
- யானையைப் பராமரிக்கும் பாகன்களுக்கு இந்து அறநிலையத் துறை தானே சம்பளம் கொடுக்க வேண்டும்?
- ஏன் இதுவரை கொடுக்கவில்லை? (இதுவரை யானை பாகன்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தது ராஜா பட்டர்)
விசயம் இது தான், யானையை நன்கொடையாக கொடுப்பவர்கள், அதைப் பராமரிக்க 15 லட்சமும், யானை பாகனுக்கு சம்பளம் கொடுக்க சில லட்சம் டெப்பாஸிடாகவும் இந்து அறநிலையத் துறைக்கு வழங்குவார்கள். (இது தவிர யானை நன்கொடை கொடுப்பவர்களிடம் கணிசமான தொகையையும் வசூலித்து விடுவார்கள்). இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு பாகன்களுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை. கோவில் பட்டர்கள் கொடுக்கும் சம்பளத்தைத் தவிர கோவில் யானைகளைப் பிச்சை எடுக்க வைத்து அந்த வருமானத்தை எடுத்துக் கொள்வதுடன் நிறுத்துவதில்லை சில பாகன்கள், யானையின் நகம் மற்றும் முடிகளைத் திருட்டுத்தனமாகப் பிடுங்கி அதை விற்பதும் நடந்து கொண்டிருக்கிறது.
அப்படி நகம் / முடிகளைக் கொடூரமாகப் பிடுங்கும் சமயத்தில் வலி தாங்க முடியாமல் காலால் இடறி விட்டதால் தான் காளிதாஸ் என்ற பாகன் உயிரிழக்க நேர்ந்தது. குடித்து விட்டு இந்தச் செயலை அடிக்கடி செய்து வந்திருக்கிறான். தெய்வானை இளம் யானை என்பதனால், வலி பொறுக்க முடியாமல் கால்களை உதறியிருக்கிறது. அதனால் தூக்கியெறியப்பட்ட காளிதாஸ் ஏற்கனவே குடித்திருந்ததாலும் மரணம் நிகழ்ந்திருக்கிறது. மற்றபடி தெய்வானை யானை ஒரு பக்தர்களிடம் கூட முரட்டுத்தனமாகவோ, கட்டுப்பாட்டை மீறியோ நடந்து கொண்டதாக ஒரு செய்தியும் இதுவரை வந்ததில்லை.
நிர்வாகத் திறன் இல்லாத ஊழல்பேர்வளிகளான இந்து அறநிலைய அதிகாரிகளின் மெத்தனப் போக்கினை மறைக்க கோவில் யானையைப் பலியாக்குகிறார்கள். இத்தனை நாள் கோவிலின் கட்டுப்பாட்டிலும், சங்கிலியால் கட்டப்பட்டும் வாழ்ந்து பழகிய யானையை திடீரென்று காட்டில் கொண்டு போய் விட்டால், அது ஓநாய்களாலும், கழுதைப் புலிகளாலும் தாக்கப்பட்டு கொடூரமாக இறந்து போக நேரிடும். மனிதர்கள் செய்யும் தவறை மறக்க அப்பாவி கோவில் யானையைப் பலி கொடுக்கவேண்டுமா?
திருச்செந்தூர் யானை இறந்ததற்கும் காரணம், அதன் பாகன் பரணியின் இது போன்ற வன்கொடுமைகள் தான். அறநிலையத் துறையால் இதுவும் மறைக்கப்பட்டது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் யானை இறந்து இத்தனை நாளாகியும் ஏன் புதிய யானை வழங்காமல் தாமதிக்கிறது?
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்வதியென்றொரு யானை மட்டுமே இருக்கிறது. கணக்குப் படி இரண்டு யானைகள் இருந்திருக்க வேண்டும் கடந்த இருபது வருடங்களுக்கு மேல் இன்னொரு யானையை கோவிலுக்கு வழங்கப்படவில்லை.

இதெல்லாம் இந்து அறநிலையத்துறையின் அலட்சியங்கள். அதற்கு இந்து தர்மப் பழக்கவழக்கங்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவில்களையும் அதன் மாண்புகளையும், சொத்துகளையும், பாதுகாப்பதற்காக தான் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது. இப்போது அந்த அறநிலையத்துறையின் காரணமாகவே, கோவில்கள் மற்றும் அதன் புனிதங்களைச் சிதைத்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பெரிய விழிப்புணர்வு எழுந்தால் தான் ஒரு தீர்வு கிடைக்கும்.