விழுப்புரம் மாவட்டம் அரண்டநல்லூர் அருகே உள்ள புத்தூர் காலனி பகுதியில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க புத்தூர் பகுதி திமுக பிரமுகர் சிவராஜ் அண்ணாமலை 700 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கொரோனா வின் போது உதவிகள் செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி வழிகாட்டுதலின் பேரில் புத்தூர் திமுக பிரமுகர் சிவராஜ் அண்ணாமலை தமது சொந்த செலவில் புத்தூர் காலனி பகுதியில் உள்ள 700 வீடுகளுக்கு முதல் கட்டமாக 5 கிலோ அரிசியும் 5 கிலோ காய்கறிகளையும் கொரோனா நிவாரண பொருளாக வழங்கியுள்ளார்.
தொடர்ந்து அரகண்டநல்லூர், மணம்பூண்டி, திருக்கோவிலூர் பகுதியில் உள்ள அமைப்பு சாரா ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 லட்சம் மதிப்பிலான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை புத்தூர் காலனி பகுதியில் உள்ள 700 வீடுகளுக்கும் அவர் தமது சொந்த செலவில் வழங்கினர். இதே நபர் கடந்த சில நாடுகளுக்கு முன்னர் தமிழக அரசின் நிவாரண நிதிக்காக ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 990 ரூபாய் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வழங்கி உள்ளார்.
தொடர்ந்து புத்தூர் கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்டத்தினை அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.