கொரோனா நோய்த்தொற்று அளவை குறைப்பதற்கும் பரவலை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று நான் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் துறையின் செயலர் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றோம் என கூறினார்.
இதில் பல்வேறு இடங்களில் புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா படுக்கை அறைகளை திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு பகுதியில் 46 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அறைகளும் மற்றொரு பகுதியில் 30 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அறைகளும், இன்று ஒரே நாளில் மட்டும் 76 படுக்கை அறைகள் திறந்த வைத்தாதக அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று பாதிக்கப்பட்டவர் 308 நபர்கள் எனவும் குணமடைந்தவர்கள் 376 பேர் எனவும், பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும் குணமடைந்தவர்கள் அளவு கூடுதலாக இருக்கிறது என தெரிவித்தார். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெரிய அளவில் எண்ணிக்கையிலானவரகள் குணமடைந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சிறப்பு மிகுந்த கருத்தை சொல்லியிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் என்று ஒன்று தனியாக அமைத்தவுடன் கலைஞர் அவர்கள் 2006-11 ஆம் ஆண்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என செயல் திட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி மாவட்ட வாரியாக மருத்துவ கல்லூரி தொடங்கி வந்தார்கள்.
அந்த அடிப்படையில் இன்று கள்ளக்குறிச்சி என்ற மாவட்டம் உருவான பிறகு, அங்கு இருக்கும் ஒரு அரசு கலைக் கல்லூரியை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்துவதற்கு கூடுதல் கட்டிடங்களை கட்டும் அந்த பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் அந்த பணிகள் முடிவடையும் நிலை என்றாலும்கூட பெரும்பகுதியிலான பணிகள் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டே அந்த கல்லூரியை செயல்பாட்டிற்கு வர இருக்கிறது என தெரிவித்தார். இந்தநிலையில் ஒரு மாவட்டத்தின் தலைநகர் பகுதியில் ஒரு அரசு பொது மருத்துவமனை இருக்க வேண்டும் என்பது நியதி அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் சிறப்பு மிக்க பகுதியாகவும், மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாகவும், நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய மக்கள் வணிகத்திற்காக திருக்கோவிலூர் வரும் சூழல் இருப்பதால் இங்கே ஒரு அரசு பொது மருத்துவமனை இந்த பகுதியில் அமைக்க வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே இருக்கும் தாலுக்கா மருத்துவமனையை தரம் உயர்த்தி மாவட்ட அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
மான்புமிகு தமிழக முதல்வர் கவனத்திற்கு அமைச்சராகிய நானும் இந்த துறையின் செயலாளரும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் எனவும், உடனடியாக இந்த மருத்துவ மனையை மாவட்ட அரசு பொது மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், புகழேந்தி, ஏஜே மணிகண்ணன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக திருக்கோவிலூர் திமுகவினர் சார்பாக 1000 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சரும் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.