கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் மேலந்தல். இந்த கிராமத்தில் பாஸ்கர் என்பவர் தமது நிலத்திற்கு சட்டவிரோத மின் வேலி அமைத்துள்ளார்.
அவரது விவசாய நிலத்தின் அருகாமையிலேயே சுப்ரமணியம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் சுப்ரமணியம் மகன் காசிநாதன் (30) தமது விவசாய நிலத்திற்கு நேற்று (13.06.2021) அதிகாலை 4.00 மணியளவில் சென்றுள்ளார்.
அப்போது பாஸ்கர் நிலத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி காசிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிந்தகாக கூறப்படுகின்றது. பின்னர் பாஸ்கர் காலை 5.30 மணிக்கு சென்ற போது, காசிநாதன் மின்வேலியில் சிக்கி இருந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் காசிநாதனின் உடலை எடுத்து சென்று அருகில் உள்ள முற்புதர்குள் மறைத்துள்ளார்.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாற்றுவதற்காக இருந்தவர் மீது பூச்சிகொல்லி மருத்து ஊற்றியதாக கூறப்படுகின்றதும். பின்னர் நேற்று நள்ளிரவு மின்வேலி அமைத்த பாஸ்கரன் மணலூர்பேட்டை காவல் நிலையம் வந்த என்னை மன்னித்து விடுங்கள் நான் தவறு செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
பின்னர் போலிசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்ததில் நடந்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னர் நேற்று இரவு முதல் போலிசார் நடத்திய சோதனையில் பாஸ்கரன் விவசாய நிலம் அருகில் உள்ள முர்புதரில் காசிநாதனின் உடல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் அவரது உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மகன் இறந்த சமபம் அறிந்த காசிநாதனின் தந்தை சுப்பிரமணி மாரடைப்பால் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோதகத்தை ஏற்படுத்தி உள்ளது.