வீட்டில் இருந்தாவாறே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி
கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்களைத் தங்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் துணையோடு வீட்டில் இருந்தாவாறே கல்வி செயல்பாடுகள் மூலம் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துவதற்காக, மாற்று கல்வி அட்டவணை ஒன்றை கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு தயாரித்துள்ளது. ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இந்த அட்டவணையை, மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ்...